திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்து எல்லை இலாதானே நின...
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்! சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! (திருப்பரங்குன்றத்தில்)